தேடி வரும் காத்துக்கு ஆடுதடி கீத்து
ஒடி வந்து குயிலக்கா பாடுதடி பாட்டு
கும் மின்னு குதிச்சி சும்மா நீ ஆடடி
கொலையோட எள நீரு குடிக்கலாஞ் சேருடி
தானானேத் தானானே தன்னனானா
குத்தாலத் தண்ணீரு குளிரடிக்கும்
கோமாரிப் பொன் அணைச்சா இதமளிக்கும்
வத்தாது சமுத்திரம் அலை யடிக்கும்
வஞ்சி நீ கொஞ்சினா சொகங் கெடைக்கும்
தந்தனா தந்தனா தன்னனானே
தானானே தானானே தன்னனானே
கட்டான ஒடம்பில தெம்பிருக்கு
கட்டிக்க மனசில நெனபபிருக்கு
ஓட்டிக்க வாடி கட்டிக் கரும்பே
ஒன்னோட உசிரா ஒட்டிக் கெடப்பேன்
(பெண் ) சட்டங்கள் போட்டு நான் கொட்ட மடிப்பெண்
தாம் தீம் தோமென்று துள்ளிக் குதிப்பேன்
இட்டமா கட்டு நீ தங்கத் தாலி
இல்லாட்டி ஒடி நீ தாண்டு வேலி
உடுக்காட்டம் இடுப்பு ஒனக்கிருக்கு
உல்லாசம் ஒன்னோட பொறந்திருக்கு
தடுத்தாலும் ஒலகம் விட மாட்டேன்
தங்கமே உன் தொணையின்றி வாழ மாட்டேன்