திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஆடுதடி கீத்து




தேடி வரும் காத்துக்கு ஆடுதடி கீத்து 
ஒடி வந்து குயிலக்கா பாடுதடி  பாட்டு 
கும் மின்னு குதிச்சி சும்மா நீ ஆடடி 
கொலையோட எள நீரு குடிக்கலாஞ் சேருடி 

தந்தனா   தந்தனா  தன்னனானா 
தானானேத் தானானே தன்னனானா
                                                  
குத்தாலத் தண்ணீரு குளிரடிக்கும் 
கோமாரிப் பொன் அணைச்சா இதமளிக்கும் 
வத்தாது சமுத்திரம் அலை யடிக்கும் 
வஞ்சி நீ கொஞ்சினா சொகங் கெடைக்கும் 
                                                   
தந்தனா    தந்தனா    தன்னனானே 
தானானே தானானே தன்னனானே 
         
கட்டான ஒடம்பில தெம்பிருக்கு 
கட்டிக்க மனசில நெனபபிருக்கு 
ஓட்டிக்க வாடி கட்டிக் கரும்பே 
ஒன்னோட உசிரா ஒட்டிக் கெடப்பேன் 

(பெண் ) சட்டங்கள் போட்டு நான் கொட்ட மடிப்பெண் 
தாம்  தீம் தோமென்று துள்ளிக் குதிப்பேன் 
இட்டமா கட்டு நீ தங்கத் தாலி 
இல்லாட்டி ஒடி நீ தாண்டு வேலி 

உடுக்காட்டம் இடுப்பு ஒனக்கிருக்கு 
உல்லாசம் ஒன்னோட பொறந்திருக்கு 
தடுத்தாலும் ஒலகம் விட மாட்டேன் 
தங்கமே உன் தொணையின்றி வாழ மாட்டேன் 

கல்வி ஒழுக்கம்


கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு 
கற்று நல் வாழ்வினில் நடைபோடு 
செல்வம் நிலைத்திடும் அறிவாகும் 
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும் 
(கல்வி ஒழுக்கம்) 

வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே 
வலம் புல பெறுவோம் நம்பிக்கையிலே 
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்

(கல்வி ஒழுக்கம் )

பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தொழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊட்டிடவே

(கல்வி ஒழுக்கம் )

ஊடக மென்பது உலகாளும்
உன்னத மான செயலாகும்
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்

(கல்வி ஒழுக்கம் )

கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல் வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும் 

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்




லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் சொல்லி  
ஹஜ் செய்தும் .......... பயனேது? 
அன்னை ஹாஜரா அன்று பெற்ற ஸம்ஸம் ஊற்று 
அன்றும் இன்றும் ......  அறிவாய், நீ!

எண்ண எண்ண நன்மை   தேடும் 
என்றன் உள்ளம் ....... மக்கா நாடி 
இங்கும் அங்கும் எங்கும் என்றும் 
சென்றும் அல்லாஹ்வை ......... நெருங்காமல் 

அங்கு தேடினேன்  சபா மறவா ஓட்டம்     பின்னர்  
இங்குத் தேடினேன்  ....  ஹஜருல் அஜ்வத் ....
குர்பான்  கொடுக்காமல்    இருந்து இருந்து 
பா வங்கள் ........ போக்கிடலாமோ ?

லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் சொல்லி  
ஹஜ் செய்தும் ..........  பயனேது? 
அன்னை ஹாஜரா அன்று பெற்ற ஸம்ஸம் ஊற்று 
அன்றும் இன்றும் ....... அறிவாய், நீ!

தங்கம் எங்கள்    நபி தேடித் 
தங்கும் மதீனா ....... சியாரத் நாடி 
எங்கள் அண்ணலை அங்கு தரிசித்தும் 
எம்முள் பாவங்கள் ....... மாறிடுமோ ...? 

லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் சொல்லி  
ஹஜ் செய்தும் .......... பயனேது? 
அன்னை ஹாஜரா அன்று பெற்ற ஸம்ஸம் ஊற்று 
அன்றும் இன்றும் ....... அறிவாய், நீ!

ஹஜ்




ஹஜ்ஜை முடித்தநல் ஹாஜீரே அச்சம் இறையுடன் கொண்டோரே இச்சை துறந்திடும் பண்பீரே பச்சைக் குழந்தையாய் ஆனீரே!
மஹ்ஷர் நினைவினில் கூட்டத்தில் அஹ்மத் நபிகளும் காண்பித்த இஹ்ராம் உடையுடன் ஓட்டத்தில் இஹ்சான் உணர்வுடன் சென்றீரே!
கண்ணீர் வடித்ததால் பாவங்கள் தண்ணீர் கழுவிய தோற்றத்தில் எண்ணம் முழுவதும் உள்ளத்தில் வெண்மை மொழுகிடச் செய்தீரே!
வண்ணம், இனங்களும் வேறாகி வெண்மை உடுத்திய தோற்றத்தில் எண்ணம் , நினைவுகள் ஒன்றாகி கண்ணில் நிறுத்திய கஃபாவில்
சுற்றி வருவதும் குர்பானி(யால்) பற்றை அறுப்பதும் செய்தீரே கற்றுத் தெளிந்ததும் ஈமானில் சற்றும் விலகிடாச் சான்றோராய்!
கோபம் குறைகளை மன்னித்து பாபச் சுமைகளை நிந்தித்து தீபச் சுடரெனத் தீன்ஏந்தி சாபம் களைந்திடச் செய்தீரே!
பல்லா யிரமெனப் பாரோரும் கல்லால் எறிந்ததேன் ஷைத்தானை உல்லா சமாகவே இல்லாமல் அல்லாஹ் விதித்தநல் லாணைக்கே!
வற்றாக் கிணறென ஜம்ஜம்நீர் முற்றும் குடித்தநல் ஹாஜீரே! இற்றைப் பொழுதினில் இன்பம்தான் சுற்றம் சுகம்பெறத் தந்தீரே!
மங்காச் சுடரென மக்காவில் பொங்கும் அருளொளி ஈமானை எங்கள் இடத்தினில் ஏற்றீரே தங்க மனத்துடன் வாரீரே!

நன்மை


            சாந்திச் சரணா லயமாம் - ஹஜ்ஜில்சாரும் புவியின் முதலா லயமாம்ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே - அருள்.இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே
தந்தைஇப் றாஹிம்பாங் கோசை - இந்தத்தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்சிந்தையிட் சேருமிறை போதம் - ஆங்குச்சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்
அரபு நாட்டுக்குள்ளோர் நாடு - அங்கேஅகில முஸ்லிம்களின் கூட்டுமா நாடுமரபு வழிகளில் தேடல் - புவிமனித நதிகளின் சங்கமக் கூடல்
வெள்ளை யுடையில் மகிழ்ச்சி - மக்கள்வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சிஉள்ளம் அழுக்கினைப் போக்கும் - அங்கேஉள்ஹிய்யா என்பதும் இந்தநல் நோக்கம்
நிலவதும் நாணியே கேட்கும் - ஹாஜிநிலவிடும் பேரொளி உன்னிப்பாய்ப் பார்க்கும்உலவும் சமத்துவம் மெய்க்கும் - உண்மைஉலகம் தெளிந்திட நாட்டியே வைக்கும்

அல்லாஹு அக்பர்



அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் யா அல்லாஹ் 
எம் -  புனித மக்காவினில் வந்த
ஹாஜிகளைப் பார்த்து மகிழ்கின்றது மனசு .....!

(அல்லாஹு அக்பர்)

ஸம்ஸம் தண்ணீரில் நிறையுது வயிறு
கல்பு துடிக்குது பாவம் கரையுது
அன்னை ஹாஜரா நாயகியை - நினைத்து நினைத்து
சபா மருவா தேடி ஓடுது பாதங்கள் ......!

(அல்லாஹு அக்பர்)

அமல்கள் நிறைந்தது பாவங்கள் கரைந்தது
தக்பீர் சொல்லும் மனசு
அன்னை அமீனா புதல்வர் -  நபி நாயகத்திற்கு
ஸ்லாம் சொல்லிடத் துடிக்குது மனசு ......!

(அல்லாஹு அக்பர்)

இஸ்லாம் மலர்கின்றது ஈமான் மணக்கின்றது
பாவக் கரையிலிருந்து தடுக்குது மனசு
எம் இஸ்லாமிய பரம்பரைக்கு - வெள்ளை
இக்ராம் உடுப்போடு மர
த்தை உணர்த்துகிறது மனசு ......!

(அல்லாஹு அக்பர்)

பொறுமை காத்திடு பெருமை சேர்த்திடு ..
நபி வழி வாழ்த்திடு மனமே ; இனி
நன்மைகள் செய்வதும் தீமைகள் தடுப்பதும்
உன் அமல்கள் ஆகனும் மனமே ......!!

(அல்லாஹு அக்பர்)

மரணம் நெருங்குது மனிதா மனிதா



மரணம் நெருங்குது மனிதா மனிதா
மெல்ல மெல்ல நகர்கின்றது வயது
மூச்சைப் போல் சுவாசிப்போம் மனிதா
பாவக் கரை போக்கிடுவோம் 

(மரணம் நெருங்கு
து மனிதா மனிதா )

போட்டி பொறாமை மறையனும்
சாதி மத பேதம் தொலையனும்
துயரம் நீக்க வாழனும்
உலக மக்கள் நிம்மதி வாழ்க்கை வாழனும்!

(மரணம் நெருங்கு
து மனிதா மனிதா )

உயிர்கள் இறை படைப்பென்று எண்ணி
மனிதம் மதிக்க வேண்டும்
இரவு பகல் இறைவனைத் தொழுது - நல்
அமல்கள் செய்திட வேண்டும் !

(மரணம் நெருங்கு
து மனிதா மனிதா )

பெரியோரை மதிக்கணும்
சிறியோரை நேசிக்கணும்
தாயின் காலடி சுவர்க்கம் போல
உறவினரை உயிராய் மதிக்கணும்!

(.மரணம் நெருங்கு
து மனிதா மனிதா)

அருள் மறை ஓதனும்
நபி வழி நடக்கணும்
பெற்றோரை மதித்து வாழனும்
கெட்ட குணங்களின்றி வாழனும் !

(மரணம் நெருங்கு
து மனிதா மனிதா)

வாழ்க்கை என்றும் நிரந்தரமில்லை
போகும் வழியோ புரியவில்லை
புரிந்து வாழப் பழகிவிட்டால்
மனிதம் மகிழந்து வாழலாம் !!

(மரணம் நெருங்கு
து மனிதா மனிதா)