அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் யா அல்லாஹ்
எம் - புனித மக்காவினில் வந்த
ஹாஜிகளைப் பார்த்து மகிழ்கின்றது மனசு .....!
(அல்லாஹு அக்பர்)
ஸம்ஸம் தண்ணீரில் நிறையுது வயிறு
கல்பு துடிக்குது பாவம் கரையுது
அன்னை ஹாஜரா நாயகியை - நினைத்து நினைத்து
சபா மருவா தேடி ஓடுது பாதங்கள் ......!
(அல்லாஹு அக்பர்)
அமல்கள் நிறைந்தது பாவங்கள் கரைந்தது
தக்பீர் சொல்லும் மனசு
அன்னை அமீனா புதல்வர் - நபி நாயகத்திற்கு
ஸ்லாம் சொல்லிடத் துடிக்குது மனசு ......!
(அல்லாஹு அக்பர்)
இஸ்லாம் மலர்கின்றது ஈமான் மணக்கின்றது
பாவக் கரையிலிருந்து தடுக்குது மனசு
எம் இஸ்லாமிய பரம்பரைக்கு - வெள்ளை
இக்ராம் உடுப்போடு மரணத்தை உணர்த்துகிறது மனசு ......!
(அல்லாஹு அக்பர்)
பொறுமை காத்திடு பெருமை சேர்த்திடு ..
நபி வழி வாழ்த்திடு மனமே ; இனி
நன்மைகள் செய்வதும் தீமைகள் தடுப்பதும்
உன் அமல்கள் ஆகனும் மனமே ......!!
(அல்லாஹு அக்பர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக