லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் சொல்லி
ஹஜ் செய்தும் .......... பயனேது?
அன்னை ஹாஜரா அன்று பெற்ற ஸம்ஸம் ஊற்று
அன்றும் இன்றும் ...... அறிவாய், நீ!
எண்ண எண்ண நன்மை தேடும்
என்றன் உள்ளம் ....... மக்கா நாடி
இங்கும் அங்கும் எங்கும் என்றும்
சென்றும் அல்லாஹ்வை ......... நெருங்காமல்
அங்கு தேடினேன் சபா மறவா ஓட்டம் பின்னர்
இங்குத் தேடினேன் .... ஹஜருல் அஜ்வத் ....
குர்பான் கொடுக்காமல் இருந்து இருந்து
பா வங்கள் ........ போக்கிடலாமோ ?
லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் சொல்லி
ஹஜ் செய்தும் .......... பயனேது?
அன்னை ஹாஜரா அன்று பெற்ற ஸம்ஸம் ஊற்று
அன்றும் இன்றும் ....... அறிவாய், நீ!
தங்கம் எங்கள் நபி தேடித்
தங்கும் மதீனா ....... சியாரத் நாடி
எங்கள் அண்ணலை அங்கு தரிசித்தும்
எம்முள் பாவங்கள் ....... மாறிடுமோ ...?
லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் சொல்லி
ஹஜ் செய்தும் .......... பயனேது?
அன்னை ஹாஜரா அன்று பெற்ற ஸம்ஸம் ஊற்று
அன்றும் இன்றும் ....... அறிவாய், நீ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக